Home /News /tamil-nadu /

சிவகங்கையில் சட்ட கல்லுரி, வேளாண் கல்லூரியை துவக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

சிவகங்கையில் சட்ட கல்லுரி, வேளாண் கல்லூரியை துவக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

கடையடைப்பு போராட்டம்

கடையடைப்பு போராட்டம்

சிவகங்கையில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் இன்று ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    சிவகங்கையில் சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியும் அமைத்து தரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். திமுக வெற்றி பெற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இந்த ஆண்டு துவங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

    ஆனால் சட்டக் கல்லூரியும், வேளாண் கல்லூரியையும் காரைக்குடியில் அமைய இருப்பதாக தகவல் தெரிய வந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகர் சிவகங்கையில் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Also read... மதுரை மேம்பால விபத்து - ஆய்வறிக்கை தாக்கல் செய்தது நிபுணர் குழு!

    சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை, குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான நீதிமன்றப் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

    எனவே மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு அறிவித்துள்ள புதிய சட்டக் கல்லூரியை சிவகங்கையில் தொடங்க வேண்டும் என தெரிவித்து வணிகர்கள் சங்கம் சார்பில் நகர் பகுதிகளில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Sivagangai

    அடுத்த செய்தி