சிவகங்கையில் இறந்தவர் என்று போலீசாரால் கூறப்பட்டவர் உயிரோடு வந்த அதிசயம்: ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாடிய உறவினர்கள்

உயிருடன் வந்த சின்னகண்ணு

சிவகங்கையில் இறந்தவர் என்று காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவர் உயிருடன் வந்த அதிசயம் நடைபெற்றுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லுப்பட்டியில் வசிப்பவர் சின்னகண்ணு( 46). மனைவியை பிரிந்து வாழும் இவர் கடந்த 10 மாதத்திற்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பிழைப்பு தேடி உறவினர்களிடமும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

தொடர்பு எதுவும் இல்லாததால் உறவினர்கள் சின்னகண்ணுவை காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் புலிகுத்திகிராமம் அருகே விவசாய கல்லூரி தோப்பிற்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக கல்லல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கல்லல் காவல்துறையினர் அருகில் இருப்பவர்களிடம்  விசாரனை செய்ததில் இறந்து கிடப்பது கல்லுப்பட்டி மாதா கோவில் அருகே வசிக்கும் காணாமல் போன சின்னகண்ணு என கூறியுள்ளனர்.

உறவினர்களை அழைத்துவந்த காவல்துறை இறந்து கிடந்தவரை காண்பித்து இவர் சின்னகன்னு தானே என்று கூற உறவினர்கள் மறுத்துள்ளனர். இருந்தாலும் கிராமத்தினர் சிலர் மற்றும் காவல்துறை உறவினர்களை மிரட்டி இறந்து கிடப்பது சின்னகண்ணு தான் என எழுதிவாங்கியுள்ளனர். அதன்பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்களும் சின்னக்கன்னு இறப்பு குறித்து சக உறவினர்களுக்கு தகவல் சொல்லி உள்ளனர். 10 வருடமாக பரிந்திருந்த மனைவி வளர்மதி மற்றும் குழந்தைகளும் கணவர் இறந்த செய்தி கேட்டு கல்லுப்பட்டி வந்து சேர்ந்தனர்.

அதாவது நேற்று காலை சின்னக்கன்னு உடலை வாங்க சிவகங்கை செல்ல இருந்த நிலையில் இறந்ததாக கூறப்பட்ட சின்னகன்னு தேவகோட்டையில் உயிரோடு இருப்பதாக உறவினர் ஒருவர் கூற தேவகோட்டை சென்று சின்னகன்னுவை அழைத்து வந்தனர். கிராமமே சின்னகன்னு இறந்து விட்டதாக கூறியதால் சின்னகன்னு உயிரோடுதான் உள்ளார் என தெரிவிக்க வண்டியில் ஏற்றி கிராம வீதிகளில் மக்களிடம் சின்னகன்னு உயிரோடு தான் இருக்கிறார் என காண்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடையாளம் தெரியாத நபரின் மூலம் இறந்தவர் வழக்கை முடிப்பதற்காக உரிய விசாரனை மேற்கொள்ளாமால் பழங்குடி மக்களை போலீசார் மிரட்டி சம்மதிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி
Published by:Karthick S
First published: