• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Black fungus | கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் விவசாயி... சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என புகார்...

Black fungus | கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் விவசாயி... சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என புகார்...

Youtube Video

சிவகங்கையில் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் இதுவரை இரண்டரை லட்சம் செலவு செய்தும் உயிருக்கு போராடி வருகிறார். சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என மதுரை அரசு மருத்துவமனை கைவிட்ட விவசாயியை அரசு காப்பாற்றுமா?

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிப்காட் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செருவலிங்கம். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி மானாமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் ஆர்.டி.பி.ஆர்.பரிசோதனை செய்துக்கொண்டார். பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்த போதிலும் தீவிர கண் வலியால் அவதியடைந்த செருவலிங்கம் சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் கண் பரிசோதனை மற்றும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார்.

    அதில் அவருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பின்னர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 6 நாட்கள் சிகிச்சை பெற்ற போதிலும் கரும்பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என கூறியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தங்களது 10 ஆடுகள், வீட்டில் இருந்த நகைகளை விற்று இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்... எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்?



    அங்கும் முறையாக சிகிச்சை அளிக்காமல் பணம் மட்டுமே வசூல் செய்ததாக தெரிவித்துள்ள செருவலிங்கத்தின் குடும்பத்தினர், அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு கண் பார்வையை முற்றிலும் இழந்து உயிருக்கு போராடி வரும் விவசாயி செருவலிங்கத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: