முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலியை தெய்வமாக வழிபடும் வினோத விழா..! - காரைக்குடியில் களைக்கட்டிய திருவிழா

புலியை தெய்வமாக வழிபடும் வினோத விழா..! - காரைக்குடியில் களைக்கட்டிய திருவிழா

புலிக்கு மரியாதை செலுத்தும் விநோத விழா

புலிக்கு மரியாதை செலுத்தும் விநோத விழா

Sivagangai : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புலிக்கு மரியாதை செலுத்தும் விநோத விழா நடந்தது. இதையொட்டி புலி, பூரான், எலி, பாம்பு, குழந்தை , கன்று சிலைகளை கிராமமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று  வழிபாடு செய்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காரைக்குடி அருகே காயவயல், கலிபுலி, மனப்பட்டி கிராமங்களை சுற்றிய அடர்ந்த  வனப்பகுதிகளில் பழங்காலங்களில் புலிகள் இருந்துள்ளன. அவற்றிடம் இருந்து தங்களை பாதுகாக்க அக்கிராம மக்கள் புலிக்கு மரியாதை செலுத்தி தெய்வமாக வழிபடும் விநோத விழாவை பல தலைமுறையாக  நடத்தி வருகின்றனர்.

இந்த விழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.  கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த இவ்விழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. மேலும் இந்த விழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே புலி சிலைகளை செய்வதற்கான பிடிமண்ணை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Also Read:  பராமரிப்பாளரை தாக்கிய வெள்ளைப் புலி.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு

கடும் விரதம் இருந்து  20 க்கும் மேற்பட்ட புலிசிலைகள் புலிகுத்தி கிராமத்தில் செய்யப்பட்டு கலிப்புலி, காயவயல், மணப்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி  சாமி அழைத்து தலைமை புலி சிலைக்கு பூஜைகள் செய்து பெண்கள் ஆரத்தி எடுத்த பின் ஆடு பலி கொடுக்கப்பட்டு புலி சிலைகளை ஆண்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக மணப்பட்டி கிராம்  வழியாக 3 கி.மீ. தூரம்  உள்ள கலிபுலி மாரியம்மன் கோயிலுக்கு இரவு கொண்டுச் சென்றனர்.

Must Read : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

மேலும் விஷ ஜந்துகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கால்நடை பெருக்கத்திற்காகவும் பெண்கள் நேர்த்திக்கடனாக பூரான், எலி ,பாம்பு, கன்றுக்குட்டி, குழந்தை சிலைகளை எடுத்துச் சென்று வழிபட்டனர். அதன்படி, புலியை தெய்வமாக வழிபடும் வினோத விழா நடைபெற்றது .

செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி.

First published:

Tags: Festival, Karaikudi, Sivagangai, Tamil News