• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 23 விநாடியில் 14 அடி கயிறு ஏறும் 5வயது சிறுவன்..!- முறையான பயிற்சி வழங்க பெற்றோர்கள் கோரிக்கை

23 விநாடியில் 14 அடி கயிறு ஏறும் 5வயது சிறுவன்..!- முறையான பயிற்சி வழங்க பெற்றோர்கள் கோரிக்கை

5வயது சிறுவன் சாலிவாகனன்

5வயது சிறுவன் சாலிவாகனன்

சாதிப்பதற்கு வயது தடையில்லை கூறுவார்கள் ஆனால் இங்கு சாதிப்பதற்க்கு வயது மட்டுமே பிரச்னை வயதை காரணம் காட்டி சிறுவன் புறகணிப்பு.

  • Share this:
     சிவகங்கை அருகே 23 விநாடியில் கயற்றில்  14அடிவரை  வேகமாக ஏறும் சிறுவனின் முயற்சியை பலரும்  பாரட்டி வருகின்றனர். 

    சிவகங்கை மாவட்டம்  சூராக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத்குமார், கற்பகவள்ளி  தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன்தான் சாலிவாகனன். 5வயதை நிரம்பிய சாலிவாகனனுக்கு கயிறு ஏறுவதில் ஆர்வம். கடந்த ஒரு வருடங்கள் முன் சாலிவாகனன் பெற்றோர் மரத்தடியில்  ஊஞ்சல் ஆடுவதற்காக சேலையை கட்டி உள்ளனர். சாலிவாகனின் அக்கா யாழ்ரசி ஊஞ்சல் ஆடும் போது சாலிவாகனன் மட்டும் ஊஞ்சல் ஆடமால் சேலையை பிடித்து விறு விறு என்று மேலே  ஏறி உள்ளான்.

    சிறுவன் சாலிவாகனன்


    Also Read:  மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிகல்வித்துறை

    இதைத்தொடர்ந்து  கவனித்த  சாலியவாகனன்  பெற்றோர் கயிற்றை மரத்தில் 14அடிவரை  கட்டி கொடுத்து ஏற சொல்லி உள்ளனர். கயிறு ஏறுவதற்கு முன் சில உடற்பயிற்சிகள் செய்கின்றான். பின்னர்  கயிற்றிலும் ஏறுவதற்கு தயார் ஆகிய உடனே  வேகமாகவும்  ஏறி உள்ளான். மேலும் ஏற்கனவே இந்திய புக்  ரெகார்ட்ஸ் படி 5வயது சிறுவன்  60 விநாடியில் 20 அடிவரை ஏறி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆனால் சாலிவாகனன் 23 விநாடியில் 14அடி வரை வேகமாக  கயிறு ஏறி உள்ளான்.

    சிறுவன் சாலிவாகனன்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட பயிற்சி மையத்தில் கூறி உள்ளனர் ஆனால் மாவட்ட பயிற்சி மையம் 14வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுக்கப்படும் என தெரிவித்து புறகணித்து உள்ளனர்.   கயிறு ஏறுவதில் இப்போதே ஆர்வமாக உள்ளான் என்றும் முறையாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
    வயதை காரணம் காட்டி புறகணிக்குமா அல்லது அவன் வயதுக்கு  ஏற்ற மாதிரி பயிற்சிகளை கொடுத்து ஊக்குவிக்குவித்து வருகாலத்தில் சாதனையாளர்களாக மற்றுவர்களா

    செய்தியாளர்: சிதம்பரம் ( சிவகங்கை) 


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: