• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 60 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாத 13 கிராம மக்கள்.. காரணம் என்ன?

60 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாத 13 கிராம மக்கள்.. காரணம் என்ன?

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை.

  • Share this:
    புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்று அனைவரையும் ஈர்க்கும் பண்டிகை தீபாவளி. அந்த மகிழ்ச்சி பொங்கும் பண்டிகையை, தொடர்ந்து 60 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள் கொண்டாடாமல் இருந்து வருகின்றனர். மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி, சத்திரப்பட்டி, கிலுகிலுப்பட்டி உட்பட்13 கிராம மக்கள் தீபாவளி கொண்டாட்டங்களை விட வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில், தீபாவளியன்று இந்த கிராமங்களில் பலகார மணம் வீசாது, பட்டாசு சத்தம் கேட்காது, புத்தாடை உடுத்திய எவரையும் காண முடியாது. தீபாவளிக்கென எந்த அறிகுறியும் இல்லாமல், வழக்கம் போல் தெருக்களில் விளையாடும் சிறுவர்கள், வயலுக்கு செல்லும் விவசாயிகளை மட்டும்தான் காணமுடியும்.

    60 ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியை கடன் வாங்கி கொண்டாடியதால், அறுவடைக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வந்தனர். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், கிராமத்தின் பெரிய அம்பலகாரர் பெரியசேவகன் தலைமையில் பொதுமக்கள் ஒன்றுகூடி, தீபாவளியை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    ஒருகாலத்தில் வறுமைக்காக தீபாவளி கொண்டாட்டங்களை நிறுத்திய கிராம மக்கள், இன்று வறுமையில் இருந்து மீண்டுவந்தாலும் கூட, கட்டுப்பாட்டை மதித்து வருகின்றனர். தீபாவளியை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் தங்களுக்கு ஏற்பட்டதில்லை என்கிறார்கள்.

    தங்களது கிராமம் மட்டுமின்றி எந்த ஊருக்கு வேலைக்கு சென்றாலும் 13 கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை என கூறுகிறார்கள். விளைநிலங்களில் உழைப்பதிலேயே இவர்களின் தீபாவளி நாள் கடந்து போய்விடுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: