அவதூறு வழக்கு : மு.க.ஸ்டாலின் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கு : மு.க.ஸ்டாலின் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு

மு.க.ஸ்டாலின்

ஏப்ரல் 9 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

  • Share this:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆஜராக வேண்டும் என சிவகங்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழக அரசை விமர்சித்துப் பேசினார்.

அதனைதொடர்ந்து தமிழக அரசையும் முதல்வரையும் அவதூறாக பேசியதாக மார்ச் 3 ஆம் தேதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், வழக்கு விசாரணை சிவகங்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த விசாரணைக்காக ஏப்ரல் 9ஆம் தேதி மு.க.ஸ்டாலின் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்தும், அரசு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் உண்மைக்கு புறம்பாக கூறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் தொடர்ந்த 5 அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

Must Read : மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு

 

அவற்றில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, மற்ற நான்கு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: