பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சிவகங்கையில் இதுவரை ரூ. 4.41 லட்சம் வசூல்

பி.மதுசூதன் ரெட்டி

விதி மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்...

  • Share this:
சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கூறுகையில், “தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களிலும், தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களிலும் சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியை பின்பற்றாததும், முகக்கவசம் அணியாததுமே கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளது.

இதனால் வழிகாட்டுதலை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரம், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200-ம், எச்சில் துப்பினால் ரூ.500-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500-ம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதலை மீறினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும். விதி மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

Must Read : பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு- உயர் நீதிமன்றம்

 

இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக ரூ.4.41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார்.
Published by:Suresh V
First published: