சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகையில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றது. கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை விரிவான அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
அகரத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம். கி.பி. 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின்பக்கம் 12 புள்ளிகளும், அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இக்காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Archaeology, Excavation, Sivagangai