காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்

காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்
மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு சார்பு ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், எழுத்தர் உள்ளிட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் காவல் நிலையத்தின் உட்புறம், வெளிப்புறங்களில் கிருமி நாசினி தெளித்து இன்று ஒரு நாள் மட்டும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறையினர் கூறியதை தொடர்ந்து மரத்து நிழலில் அமர்ந்து போலீசார் காவல் நிலைய பணியினை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் மற்றும் அலுவலக ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் என ஏற்கனவே 3 காவலர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்த கட்டமாக காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு தொற்றுப் பரவி வருவதால் போலீசார் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருவதில் காவலர்களுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதால் காவல்துறை வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading