• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • News 18 Special : பகலில் ஆசிரியர், இரவில் சடலம் எரியூட்டும் பணியில் ஈடுபடும் இளைஞர்

News 18 Special : பகலில் ஆசிரியர், இரவில் சடலம் எரியூட்டும் பணியில் ஈடுபடும் இளைஞர்

Youtube Video

தனக்கு அரசு உதவ முன்வந்தால் பேரூதவியாக இருக்கும் என்றும் ஏதேனும் வேலை வாய்ப்பு வழங்கினால் தன்னுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

  • Share this:


    இரவில் மயானத்தில் பிணம் எரிக்கும் வேலை. பகலில் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி என கடுமையாக உழைக்கும் பட்டதாரி இளைஞர் அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மயானத்தில் இரவில் பிணம் எரிப்பதுடன் பகலில் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து பல சாதனைகளை படைத்துவருகிறார். தன்னுடைய ஏழ்மையை போக்க அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

    மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியை சேர்ந்தவர்கள் கருத்தகாளை, பஞ்சவர்ணம் தம்பதியர். இவர்கள் இருவரும் மானாமதுரை மயானத்தில் பிணம் எரிக்கும் பணி செய்து தனது வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ள நிலையில் கடைசி மகன் சங்கர்.அவர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் பெற்றுள்ளார்.



    இவர் மட்டுமே கருத்தகாளை குடும்பத்தில் முதல்பட்டதாரியும் ஆவார். சங்கர் தனது குடும்ப வறுமை காரணமாக சிறுவயது முதலே பள்ளிக்கு செல்வதுடன் மாலை தனது தந்தை தாயிக்கு உதவியாக பிணம் எரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.



    மேலும் சங்கருக்கு கலை மீது ஆர்வம் அதிகம் காரணமாக ஓவியம் வரைவதிலும் சிறந்துவிளங்கினார். இன்நிலையில் அவருக்கு திருமணமானதுடன் வேலை வாய்ப்பும் கிடைக்காததால் தனக்கு தெரிந்த ஓவியத்திறமையை கொண்டு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிக்கு சேர்ந்து தற்சமயம் பணிபுரிந்து வருகிறார்.





     

    மேலும் அந்த வருமானமும் போதுமானதாக இல்லாததால் இன்றளவும் மயானத்தில் பிணம் எரிக்கும் பணியில் தன்னுடைய தந்தைக்கு துணையாக செல்கிறார்.



    இன்நிலையில் தனக்கு அரசு உதவ முன்வந்தால் பேரூதவியாக இருக்கும் என்றும் ஏதேனும் வேலை வாய்ப்பு வழங்கினால் தன்னுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.



    இவரின் ஓவிய திறமையை பார்த்து தனியார் அமைப்புகள் பல பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாலும் அரசு இந்த திறமையான அங்கிகரிக்க முன் வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: