மதுபோதையில் விவசாயி அடித்து கொலை - தந்தை ,மகன் கைது..!

சிவகங்கையில் மது போதையில் நடந்த சண்டையில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பாராவயலை சேர்ந்தவர் ராக்கப்பன் (50). விவசாயி ஆன இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (45). கருப்பையாவிடம் ராக்கப்பன் பல ஆண்டுக்கு முன்பு உள்நாட்டு பத்திரம் அடிப்படையில் ஒரு மனை இடத்தை வாங்கியுள்ளார். கருப்பையா அந்த இடத்தை ராக்கப்பனுக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கும் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

ராக்கப்பன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த இடத்தில் சாராயம் காய்ச்ச ஊரல் போட்டு இருந்ததால் தகவலின் பேரில் வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கருப்பையாதான் காரணம் என எண்ணிய ராக்கப்பன் மது போதையில் நேற்று மாலை கருப்பையாவிடம் சண்டை போட்டதுடன் தான் கையில் வைத்திருந்த கம்பியால் கருப்பையாவை தாக்கியுள்ளார்.

Also Read : வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தியதாக விஜய் சேதுபதி மீது இந்து மகாசபா புகார்


அங்குவந்த கருப்பையாவின் 15 வயது மகன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த மூங்கில் கட்டையால் ராக்கப்பனை மண்டையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கருப்பையாவையும், அவரது மகனையும் சாக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading