2500 போட்டியாளர்கள்... ₹ 1 லட்சம் பரிசு...! கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட மாநிலம் தழுவிய PUBG போட்டி...!

2500 போட்டியாளர்கள்... ₹ 1 லட்சம் பரிசு...! கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட மாநிலம் தழுவிய PUBG போட்டி...!
  • News18
  • Last Updated: February 21, 2020, 2:24 PM IST
  • Share this:
தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்தில், மாநில அளவிலான பப்ஜி விளையாட்டுப் போட்டி நடத்த இருந்த நிலையில்,  எதிர்ப்பு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி மற்றும் கல்லல் நகர்களில் இயங்கி வருகிறது அன்னை மொபைல்ஸ் கடை. இதன் உரிமையாளர்கள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கல்லலில் உள்ள செளந்தர நாயகி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத தேர்த் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மாநிலம் தழுவிய அளவில் பப்ஜி போட்டியை நடத்த தீர்மானித்தனர் அன்னை மொபைல்ஸ் கடை உரிமையாளர்கள்.

மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியில் காலையில் 9 மணி முதல் இரவு வரை விளையாட வேண்டும். இந்தப் போட்டியி்ல், ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம் 600 குழுக்கள் என, மொத்தம் 2500 பேர் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது.


அரை மணிநேரத்தில் 25 குழுக்கள் விளையாட வேண்டும்; அவற்றில் வெற்றி பெறும் குழு இறுதிப் போட்டியில் பங்கேற்கும். இறுதிப்போட்டியில் 24 குழுக்கள் பங்கேற்கும்; அவற்றில் வெற்றி பெறும் முதல் மூன்று குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்; 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 3வது பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தப் பரிசை பொருளாகவோ ரொக்கமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்கி்ன்று கடை உரிமையாளர்கள் கூறினர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தின் பாதகங்கள் பற்றிய விழி்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினர் ஏற்பாட்டாளர்கள்.அதேநேரம், சென்னை போன்ற நகரங்களில் 4 பேர் விளையாடும் பப்ஜி விளையாட்டிற்கே சர்வர் பிரச்னை இருக்கும் நிலையில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் எப்படி பங்கேற்க முடியும் என்ற கேள்விகள் எழுந்தது. அதனால் இது மோசடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியிருந்தனர்.

கபடி, ஜல்லிக்கட்டு என உடல் திறன் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் கிராமத்தில் பப்ஜி விளையாட்டுப் போட்டி அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றதாக கூறப்பட்டது.

இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொண்டு போய் விடும் ஆபத்தான பப்ஜி விளையாட்டை ஊக்குவிக்கம் வகையில் உள்ள இந்த விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.

மாவட்ட ஆட்சியரகம் மற்றம் போலீசாரிடம் விசாரித்தபோது இதுகுறித்து தங்களிடம் அனுமதி எதுவும் பெறப்டவில்லை என்றும் விசாரி்தது வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்