சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் விசாரணை - சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது

சுஷ்மிதா

சுசில் ஹரி பள்ளி ஆசிரியைகள் கருணா , நீரஜ், சுஷ்மித்தா, மூவரிடமும் தனித்தனியாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்றது.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான சுசில் ஹரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படித்த முன்னாள் மாணவிகள் சிலர் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தனர்.

  இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

  Also Read: PUBG Madan: வீடியோ டேப்.. யார் அந்த ராணி?.. பப்ஜி மதன் கொடுத்த 5 லட்சம்.. - விசாரணையில் அவிழும் மர்மம்

  தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து விமானம் மூலம் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ராஜிவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் முன்னிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த வழக்கில் இன்று கேளம்பாக்கம் ஆசிரமத்துக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கிருந்த 3 பக்தர்களிடம் விசாரணை நடத்தினர். பள்ளி ஆசிரியைகள் சிலரை சிபிசிஐடி போலீஸார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

  Also Read: PUBG Madan :'நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா..’ எல்லாமே காதுகொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் - யார் இந்த மதன் ?

  சுசில் ஹரி பள்ளி ஆசிரியைகள் கருணா , நீரஜ், சுஷ்மித்தா, மூவரிடமும் தனித்தனியாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்றது.இந்நிலையில் சுசில் ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மித்தா கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளை மூளைசலவை செய்து சிவசங்கர் பாபாவிற்கு உடைந்தாக இருந்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: