பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் சிவசங்கர் பாபா வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் சிவசங்கர் பாபா வழக்கு சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றம்

போக்சோ உட்பட 5 பிரிவுகளில்ம் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

  • Share this:
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் சிவசங்கர் பாபா வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்து கேளம்பாக்கம் அருகே சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை சாமியார் என மக்களால் பலரால் அழைக்கப்படும் சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.

தன்னை, கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது நூற்றுக்கணக்கான புகார்கள் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்காக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சுஷில் ஹரி இண்டெர்னேஷ்னல் பள்ளியின் முதல்வர், தாளாளர், என 4 நிர்வாகிகளும் சிவசங்கர் பாபா சார்பாக ஒரு வழக்கறிஞரும் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடதப்பட்டது. இதனால் மீண்டும் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் சிவசங்கர் பாபா தலைமறைவானது தெரியவந்தது. ஆன்மீக சுற்றுலாவிற்கு உத்தரகாண்ட் சென்ற சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அதில், இருவர் முன்னாள் மாணவிகள் என்றும், ஒருவர் தற்போது படித்து வரும் மாணவி என்றும் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Also read: கருப்பு பூஞ்சைக்கான மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: அதிரவைக்கும் கருப்பாடுகளின் நெட்வொர்க்!

ஏற்கனவே பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜ கோபாலன், அதே பள்ளியின் தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜ், சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன், தடகள பயிற்சியாளர் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் தற்போது தன்னை கடவுள் என சொல்லி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிவசங்கர் பாபா வழக்கும் சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட்டுள்ள சம்பவமானது தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
Published by:Esakki Raja
First published: