ரகசிய அறையில் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் அத்துமீறல்... வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

Youtube Video

மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல் நடந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை அவர் நேற்று அடையாளம் காட்டியிருந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் ஆசிரமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

 • Share this:
  பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவிற்கு துணையாக இருந்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆசிரியையின் பகீர் வாக்குமூலம் என்ன?

  சென்னை கேளம்பாக்க்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல் நடந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை அவர் நேற்று அடையாளம் காட்டியிருந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் ஆசிரமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

  அத்துடன் அவரின் ரகசிய அறைக்கு சீல் வைத்த போலீசார் அவருக்கு உதவியாக இருந்த மூன்று ஆசிரியைகளை விசாரணைக்காக சென்னை அழைத்துவந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுஷ்மிதா என்ற ஆசிரியை போலீசார் விசாரணையின் போதே கைது செய்தனர்.

  சுஷ்மிதா தான் சிவசங்கர் பாபாவிற்கு உதவியாளராக இருந்துள்ளார் என்றும் மாணவிகளை சிவசங்கரின் அறைக்கு மூளைசலவை செய்து அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் நீரஜ் மற்றும் கருணா என்ற இரு ஆசிரியைகளிடமும் விசாரணை தொடர்ந்து வருகின்றது. இதற்கிடையே கிளைசிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதையடுத்து சிறையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர்பாபாவிற்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  சிவசங்கர் பாபாவின் சீல்வைக்கப்பட்ட ரகசிய அறையை விரைவில் போலீசார் திறந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: