ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

அறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா

நிர்வாகிகளில் செயலால் சிவசங்கர் பாபா ஆசிரமத்திலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறி இமயமலை சென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவசங்கர் பாபாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியவர்கள், “சிவசங்கர் பாபாவின் அறக்கட்டளை நிர்வாகியான ஜானகி சீனிவாசன் என்பவர் மற்ற அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.

இதன்காரணமாகவே சிவசங்கர் பாபா ஆசிரமத்திலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறி இமயமலை சென்றதாக தெரிவித்தனர். தற்போது சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அறக்கட்டளை நிர்வாகிகள் முறையான வழக்கறிஞரை நியமிக்காமல்

பா.ஜ.கவின் கே.டி.ராகவனை வழக்கறிஞராக நியமித்து பாபாவின் மீது அரசியல் சாயம் பூசும் முயற்சியிலும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவசங்கர் பாபாவிற்கு எதிரான அறக்கட்டளை நிர்வாகிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் சிவசங்கர் பாபாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் சிவசங்கர் பாபா மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் அவர்கள் கூறினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Sexual abuse, Siva Shankar Baba, Tamilnadu