2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்தார் பவித்ரா. அதன்பிறகு குக்வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட அவர், தமிழக மக்களிடையேயும் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், மற்றொரு புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. சதீஷ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை நடிகர் சதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பவித்ரா அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில், சதீஷ் கையில் ஒரு மரக்கட்டையை மொபைல் போன் போல் கொண்டு வந்து பவித்ரா சிவகார்த்திகேயன் லைனில் உள்ளார் என கூறி பவித்ராவிடம் கொடுக்கின்றார். அதனை வாங்கிய பவித்ரா உடனே ஆச்சர்யத்தில் ஹலோ என கூற அடுத்த நிமிடம் கையில் இருந்தது மொபைல் போன் அல்ல மரக்கட்டை எனத் தெரிய வர உடனே தனது கையில் இருந்த கட்டையை விளையாட்டாக தூக்கி எறிகிறார்.
சதிஷ் பவித்ராவிடம் விளையாட்டாக செய்த இந்த செயலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 3.7 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். 72 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.