• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கமல்ஹாசன் என் நெருங்கிய நண்பர்.. : மூன்றாவது அணி குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து

கமல்ஹாசன் என் நெருங்கிய நண்பர்.. : மூன்றாவது அணி குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து

சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக சதி செய்கிறது..

  • Share this:
    கமல்ஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர்தான் என்றும், தமிழகத்தைப் பொறுத்த வரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்காது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டம் அழகாபுத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசினார்.

    அதன் பின்னர், திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த யெச்சூரி, திமுக தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “கமல்ஹாசன் எனக்கு நெருங்கிய நண்பர்தான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்காது” என்றார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது. என்றும், பாஜகவை திமுக கூட்டணி திறம்பட எதிர்கொள்ளும் எனவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், 80 வயதிற்கும் மேற்பட்டோர் தேர்தலில் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து புகார் அளித்துள்ளோம். 80 வயது மதிக்கத்தக்கவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு அளிப்பார்கள் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஓட்டை வேறு யாரும் போடக்கூடாது என்றும் கூறினார்.

    Must Read : மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு... நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

     

    மேற்கு வங்கத்தில், 8 கட்டமாக தேர்தல் நடைபெறுவது எதற்கு? என்று கேள்வி எழுப்பிய சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக சதி செய்வதாக எங்களுக்கு  சந்தேகம் இருக்கின்றது என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: