Home /News /tamil-nadu /

சிறுதானிய உணவுகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறுதானிய இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சிறுதானிய உணவுகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறுதானிய இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சிறுதானிய இயக்கம்

சிறுதானிய இயக்கம்

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட குறுதானிய அரிசியை கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து சென்னை, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  ட்ன் சிறுதானிய உணவுகளின் உற்பத்தியையும் சாகுபடியையும் அதிகரிக்கும் வண்ணம் சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  தமிழக அரசின் முதல் வேளான் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நல துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சிறு தானிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது தொடர்பாக உரையாற்றிய அவர், “ தினை மாவையும், தேனையும் தமிழ் மக்கள் ருசித்து உண்டதாக தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.  சிறுதானியங்களும், குறு தானியங்களும் அதிக  இடுபொருட்கள் இன்றி உருவாகும் இயல்புகொண்டவை. மழை பெய்தாலும் அவை பொய்க்காது என்ற தன்மையை கொண்டவை.

  இதையும் படிங்க: 2021-22 பட்ஜெட் - தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு?


  அவை அதிக நேரம் பசியை தாக்குபிடிக்கும் ஆற்றல் உள்ளவை. நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உடையோருக்கு அவை ஏற்ற உணவாக இருக்கின்றன.  காலப்போக்கில் அரிசியின்  பயன்பாடு அதிகரித்ததால் அவை நம் மண்ணைவிட்டு மறையத் தொடங்கின.  அதன் காரணமாக ஊரக பகுதிகளில் அவற்றை உண்பவர்கள்  குறையத் தொடங்கினர்.  ஆனால் அண்மை காலமாக சிறு தானியங்களையும் குறுதானியங்களையும் மக்கள் விரும்பி உண்ணும் நிலை  உருவாகிவிட்டது.

  அரிசி போன்றவற்றில் உற்பத்தி செய்யக்கூடிய உணவு வகைகளை சிறுதானியங்களிலேயே செய்யும் சமையல் முறைகள் வந்துவிட்டன. பல பெருநகரங்களில்  சிறுதானியத்திற்கென்றே உணவகங்கள் இருக்கின்றன.

  மேலும் படிக்க: தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை!


  மழை அதிகம் பொழியாத இடங்களில் வேளாண் பெருமக்களுக்கு சிறுதானியங்களை வளர்க்க பயிற்சியும் அவற்றை சந்தைப்படுத்த வசதிகளும் செய்துதரப்படும்’ என்று அறிவித்தார்.  இதன் மூலம் சிறுதானியங்கள் மீண்டும் தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்படும் என்றும் ஊட்டச்சத்து மிகுந்த கம்பு,கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி,சாமை போன்ற சிறுதானிய பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், மானாவாரி நிலங்களில் சாகுபடியினை  அதிகரிக்க, தரமான  விதை விநியோகம், இயந்திர விதைப்பு, உயிர் உரங்கள் பயன்பாடு போன்ற உயர் விளைச்சல் உத்திகளை கொண்டு சிறு தானிய இயக்கம் கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,  சேலம், நாமக்கல், தருமபுரி,கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்,  திருப்பூர்,மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

  ரேசனில் குறுதானியங்கள்

  மேலும் குறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனையை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட குறுதானிய அரிசியை கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து சென்னை, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.  நீலகிரி மாவட்டம் கொத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்திடும் சிறு தானியங்களுக்கென பதப்படுத்தும் மையமும் அமைக்கப்படும் என்றும் சிறுதானிய இயக்கம் 12 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில்  மத்திய , மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: TN Budget 2021

  அடுத்த செய்தி