ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சீர்காழி பேய் மழைக்கு மேகவெடிப்பு காரணமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சீர்காழி பேய் மழைக்கு மேகவெடிப்பு காரணமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

மழை

மழை

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழைக்கு மேக வெடிப்பு ( Cloud Burst ) காரணம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் என்றும், 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

  அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Heavy rain, Weather News in Tamil