கொழுந்து விட்டு எரியும் மரங்கள்: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மக்கள் கண்டனம்

கொழுந்து விட்டு எரியும் மரங்கள்: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மக்கள் கண்டனம்
ஒஎன்ஜிசி தீ
  • News18
  • Last Updated: October 3, 2018, 7:49 AM IST
  • Share this:
சீர்காழி அருகே .என்.ஜி.சி நிறுவனத்தின் பெட்ரோலிய குழாய்களை சுத்திகரிக்கும் பணியின் போது மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து கருகுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருநகரி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எண்ணெய் துரப்பணப் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பணியின் போது, வெளியேறும் வாயுவை சோதனைக்காக ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் எரிய வைத்துள்ளனர். இதனால் பலத்த சப்தத்துடன் வாயு எரிந்து வருவதால் திருநகரி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் சங்கர், நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.  மேலும், வெப்பம் தாங்காமல் சுற்றியுள்ள விளை நிலங்களில் தென்னை மரங்கள் கருகி வருவதாகவும், எண்ணெய் துரப்பண பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: October 3, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading