தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதிகளில் 631 ஹெக்டேர் பரப்பளவில் 310 கோடி செலவில் தொழிற்பூங்கா ஒன்றை அமைக்க சிப்காட் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
இந்த தொழிற்பூங்காவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய கெமிக்கல் ஆலைகள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த விண்ணப்பத்தை சிப்காட் நிறுவனத்திடமே திருப்பி அனுப்பிவிட்டது.
”திட்ட அமைவிடத்தில் இருந்து 150 மீ தொலைவில் 1,50,00 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை அதிகமான இடத்தில் தொழிற்பூங்கா அமைக்க முடிவெடுத்தது தவறு.
திட்ட அமைவிடத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் கொண்டு வருவது 8.33 கி.மீ தொலைவில் உள்ள மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட உயிர்க் கோளத்தை கடுமையாக பாதிக்கும்.
திட்ட அமைவிடம் தேர்வு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை.
தூத்துக்குடி நகர பெரும் திட்டத்கின் கீழ் பொது ஆலைகளை மட்டுமே அனுமதிக்க வழி உள்ள நிலையில் சிப்காட் நிறுவனமானது ஸ்டெர்லைட், வி.வி.மினரல் போன்ற அதிக மாசு ஏற்படுத்தும் ஆலைகளை எப்படி அமைக்க அனுமதி வழங்கியது?
இப்படி ஒரு திட்டத்தை மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலங்களிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் மட்டுமே அமைக்க திட்டமிட வேண்டும்” என்று கூறி தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தை, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிராகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.