அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை தனது வீட்டில் சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவிக்கு அதிகாரமில்லை என தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன். பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது, அதை வேறு ஒருவருக்கு கொடுக்க நினைத்தால் அது அவருக்கு செய்யும் துரோகம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்
செய்தியாளர் சந்திப்பின்போது பேசியவர், “ அதிமுகவில் பொது செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே அது அவருக்கே உரித்தானது. 30 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி வகித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பொது செயலாளர் பதவி அவருக்கு மட்டுமே உரியது என்று நானும் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்தோம் என்றார்.
ஆட்சி பறி போகக்கூடாது என நானும் எடப்பாடி பழனிசாமியும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என நாங்கள் ஒன்றாக இணைந்தோம். ஆறு ஆண்டுகாலமாக எந்தப்பிரச்னையும் இல்லை. துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இருந்தாலும் கட்சி நன்மைக்காக பிரதமர் கேட்டு கொண்டதால் நான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஏன் திடிரென இந்த ஒற்றை தலைமை குழப்பம் வந்தது என்று தெரியவில்லை என கூறினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து செல்வதற்காக மாதவரம் மூர்த்தி எடப்பாடி பழனிசாமி தான் அழைத்து வந்தார். அவர் தான் முதன் முதலில் ஒற்றை தலைமை என ஆரம்பித்தார் என கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
அப்போது பேட்டி அளித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொருத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.
அதிமுகவிற்கு இரட்டை தலைமை சரியானதா இல்லையா என்ற கேள்விக்கு
இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக செல்கிறது.ஒற்றை தலைமை பொது செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க நினைத்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் என கூறினார். அம்மா மட்டுமெ நிரந்தர பொது செயலாளர் என தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. எனவே அவர் மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அவருக்கு மட்டுமே உரித்தானது.
அனைத்து உட்கட்சி தேர்தலையும் நடத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் முறைப்படி தேர்ந்தெடுத்த பிறகு இப்படி ஒரு குழப்பம் தேவையா என ஓபன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். மேலும் நானும் எடப்பாடி பழனிசாமி எந்தவித பிரச்சினையும் இன்றி ஒருங்கிணைத்து ஒற்றுமையாக செயல்பட பேச்சு வார்த்தை நடக்கிறது.
Also Read : என்னை ஓரங்கட்ட முடியாது.. 23ஆம் தேதிக்குள் முடிவு... ஓபிஎஸ் பரபரப்பு
14 மூத்த அதிமுக உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, கட்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் அவர்கள் இறுதியாக என்ன சொல்கிறீர்களோ அதை தான் கேட்போம் என கூறினார். நான் இதுவரை எல்லாவற்றையும் விட்டு கொடுத்ததற்க்கு காரணம் தொண்டர்கள் தான். தற்காலிக ஏற்பாடக மட்டுமே கட்சியை வழி நடத்துவதற்க்கு மட்டுமே சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனக்கு எதிராக அதிமுகவில் எந்த குழுவும் செயல்படுகிறது என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. அதிமுகவிலிருந்து யாராலும் என்னை ஓரங்கட்ட முடியாத தொண்டர்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஒற்றை தலைமை பிரச்சனை எனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது எனவும், 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு என்ன சொல்கிறதோ அதற்க்கு தலை வணங்குவேன் என கூறினார்.23 ம் தேதிக்குள் சுமூகமான முடிவு எட்டப்படும் என நான் கடவுளை வேண்டி கொள்கிறேன் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AIADMK, Bodinayakanur Constituency, Edappadi palanisamy, Jayakumar, O Panneerselvam, OPS - EPS, Ops press meet, Politics, Tamil News, Tamilnadu