• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மோடி ஹீரோ இல்லை... டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது - வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் டி.எம். கிருஷ்ணா

மோடி ஹீரோ இல்லை... டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது - வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் டி.எம். கிருஷ்ணா

வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா

வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா

  • Share this:
வண்ணாரப்பேட்டையில் 17-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "இந்தியாவில் உள்ள அனைத்து போராட்டங்களும் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகின்றன. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.ஆர்.பி ஆகியவற்றை சேர்த்தே கூற வேண்டும். இந்த மூன்றும் பெரும் சூழ்ச்சி.  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். இது இஸ்லாமியர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. சிறுபான்மையினர், ஏழை மக்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவர்கள். எனவே ஒவ்வொரு குடிமகனும் எதிர்த்து போராட வேண்டும்.

டெல்லி கலவரம் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் நோக்கத்தையும், குணத்தையும் வன்முறை கெடுக்கும். வன்முறையில் இறந்தவர் எந்த மதத்தவர் என்று யோசிக்கும் மோசமான நிலைக்கு நாம் வந்துள்ளோம். 90% போராட்டங்கள் அமைதியான முறையில் தான் நடைபெறுகிறது. போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம். போராட்டம் இருந்தால் தான் சந்தோசம் இருக்கும். நம் நம்பிக்கையை உணர வேண்டிய தருணம்.

சமூக வலைத்தளங்களிலும் வன்முறை பெருகி விட்டது. அது ஒரு சாக்கடை. நாட்டில் விழிப்புணர்வு கொண்டு வந்தது இளைஞர்கள் தான். அவர்களே நமக்கு வழிகாட்டி. ஆனால், இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள்.

நாட்டு மக்களிடையே ஆட்சியார்கள் ஈகோ பார்க்கிறார்கள். மோடியும் அமித் ஷாவும் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்று பார்க்கிறார்கள். இறுதியில் ஜனநாயகமே வெற்றி பெறும். எத்தனை பேர் உயரிழக்க போகிறார்கள் என்ற பயம் உள்ளது. வன்மத்தை விதைத்து வருகிறார்கள். மோடி ஒன்றும் ஹீரோ அல்ல. நாம் தேர்தெடுக்கப்பட்டதால் தான் மோடி பிரதமர். எனவே ஜனநாயக நாட்டில் மக்களே மன்னர்கள்".என்றார்.

மேலும் படிக்க: திருப்பதியில் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரி அத்துமீறல்...!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: