முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாடகர் எஸ்.பி.பி நலம் பெற்று அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

பாடகர் எஸ்.பி.பி நலம் பெற்று அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அனைத்து நெஞ்சங்களிலும் இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,‌ அவர் நலம் பெற‌வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நமது நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ” இந்திய சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், அடிமைப்பெண்  திரைப்படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கேளடி கண்மணி படத்தின் மூலமாக மூச்சு விடமால் பாட முடியும் என்று நிருபித்து காட்டியவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் பாடல்களுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை, மாமேதையாக இருக்கும் அவர் மீண்டு வர வேண்டும். அவர் குரல் தமிழகத்தில் ஒலிக்க வேண்டும். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பிரத்தனை செய்து வருகின்றனர். அவர் உடல் நல பெற வேண்டும் என்று முதல்வர் அறிக்கை கொடுத்து உள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்.பி.பி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்”.

மேலும் படிக்க...எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

அதனை தொடர்ந்து பேசியவர், “ இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ‌ திரைத்துறையினர் எஸ்.பி.பி உடல் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளனர். இப்படி அரசு, திரைத்துறை என அனைத்து நெஞ்சங்களிலும் இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அவர் நலம் பெற‌வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ‌நலம் பெற்று வந்து அவரது  கணீர் குரல்  மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் ” இவ்வாறு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

First published:

Tags: Minister kadambur raju, S.P.Balasubramaniyam