முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்

மாணிக்க விநாயகம்

மாணிக்க விநாயகம்

மாணிக்க விநாயகம் ஏறக்குறைய 800 பாடல்கள் வரை பாடியுள்ளார். திருடா திருடி, யுத்தம் செய், வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

  • Last Updated :

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது. 78

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் சேர்ந்த.இராமையாவின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், ஏறக்குறைய 800 பாடல்கள் வரை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.

top videos

    திருடா திருடி, கம்பீரம், பேரழகன்,வேட்டைக்காரன், யுத்தம் செய் போன்ற எண்ணற்ற திரைப் படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாயகம் உயிரிழந்தார்.

    First published:

    Tags: Singer, Tamil Cinema