மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி சிந்துவின் தந்தை அரசு உதவியுடன் டீ கடை தொடங்கினார்.
இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி சிந்துவின் தந்தை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு அரசு மருத்துவமனையில் அரசு உதவியுடன் டீ கடை தொடங்கினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வருகிறார் சிந்து. சிகிச்சையில் இருந்த போதே பன்னிரண்டாம் வகுப்பு தேர்வையும் எழுதி முடித்தார். அவர் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பிறகு, கடந்த மாதம் முதல்வரும் நேரில் சந்தித்தார்.
அப்போது சிந்து அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திலேயே அவரது தந்தை சக்திக்கு டீ கடை வைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: அனைத்து சாலைகளும் சென்னையை நோக்கி... விடுமுறை முடிந்து திரும்பியவர்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
அதன்படி, அவருக்கு அரசுக்கு டீ கடை அமைத்து தந்துள்ளது. நேற்று முதல் ஓமந்தூரார் மருத்துவமனையில் டீ கடை தொடங்கி நடத்தி வருகிறார்.
"எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. எனது மகள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே டீ கடை கொடுத்திருப்பது மிக மகிழ்ச்சி." என சக்தி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.