Home /News /tamil-nadu /

பெரும்பாலான மக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டனர் என செந்தில் பாலாஜி பேட்டி

பெரும்பாலான மக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டனர் என செந்தில் பாலாஜி பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கட்டணம் தொடர்பாக மூன்றரை கோடி மின் இணைப்புகளில், 7 ஆயிரம் புகார்கள் மட்டுமே வந்த நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையின் வடக்கு மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வு கூட்டம், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாதவரத்தில் நடைபெற்றது. இதில், மின்வாரியத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின் பயன்பாட்டை பொருத்தவரை உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளதாக கூறினார். இதை குறைக்கும் வகையில் புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வில், 60 நாட்களில் முதல் 10 நாட்களில் பழைய கட்டணமும், மீதமுள்ள 50 நாட்களுக்குத் தான் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், மின் கட்டண உயர்வு தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தின் மூலம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வெறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே புகார் தெரிவித்ததாக கூறினார். எனவே, பெரும்பான்மையினர் உத்தேசிக்கப்பட்ட அளவை ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Electricity bill, People Voice, Senthil Balaji

    அடுத்த செய்தி