• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கு: திருவாரூரில் 8 பேருடன்  எளிமையாக நடந்த திருமணம்..!

ஊரடங்கு: திருவாரூரில் 8 பேருடன்  எளிமையாக நடந்த திருமணம்..!

எளிமையாக நடந்த திருமணம்.

எளிமையாக நடந்த திருமணம்.

மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து அரசு விதித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர்.

  • Share this:
திருவாரூரில் முழு ஊரடங்கு காரணமாக 8 பேருடன் மணப்பெண் இல்லத்தில் எளிமையாக  திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வெளியில் செல்பவர்களைப் பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இவ்வாறு முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் நேதாஜி சாலையில் மணமகன், மணமகள் வீட்டார் 8 பேர் பங்கேற்ற எளிமையான திருமணம் ஒன்று நடந்துள்ளது. திருவாரூர் நேதாஜி சாலையில் வசிக்கும் தங்க மாரியப்பன் என்பவரது மகள் செல்வ மகேஸ்வரிக்கும், சென்னை கணேசன் என்பவரது மகன் தீபன் குமாருக்கும் இன்று காலை திருவாரூரில் உள்ள மணப்பெண் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்து அரசு விதித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர். மேலும், திருமணத்திற்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி தெளித்து அவர்களுக்கும் முகக்கவசம் வழங்கி உள்ளே அனுமதித்தனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: