கோவில்பட்டி அருகே எளிமையாக நடைபெற்ற இரு திருமணங்கள்... டூவிலரில் வீடு திரும்பிய புதுமண தம்பதி...!

கோவில்பட்டி அருகே எளிமையாக நடைபெற்ற இரு திருமணங்கள்... டூவிலரில் வீடு திரும்பிய புதுமண தம்பதி...!

தான் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து திருமண அழைப்பிதழைக் காட்டி, பாஸ் வாங்கித்தான் திருமணத்திற்கே வந்ததாகக் கூறுகிறார் மணமகன் சங்கர்.

தான் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து திருமண அழைப்பிதழைக் காட்டி, பாஸ் வாங்கித்தான் திருமணத்திற்கே வந்ததாகக் கூறுகிறார் மணமகன் சங்கர்.

  • Share this:
ஊரடங்கு காரணமாக திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயயுரத்தில் சங்கர் - மாலினி, சரவணன் - அமுதா ஆகிய இரு ஜோடிகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள வண்டி மலைச்சியம்மன் - மலையன் சுவாமி திருக்கோவிலில் எளிமையான முறையில், குறைந்த நபர்களுடன் திருமணம் நடந்தது. மணமக்களும் திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

இதில் சங்கர் - மாலினி தம்பதியினர் திருமணம் முடிந்தவுடன் தங்களது வீட்டிற்கு டூவிலரில் சென்றனர். இது குறித்து மணமகன் சங்கர் கூறுகையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  இந்தத் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தாகவும், மிகப் பெரிய அளவில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் கூறும் அவர், திருமண வரவேற்பு, மணமக்களைக் காரில் ஊர்வலம் அழைத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்தோம் என்கிறார்.

மேலும், தான் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து திருமண அழைப்பிதழைக் காட்டி, பாஸ் வாங்கித்தான் திருமணத்திற்கே வந்ததாகக் கூறுகிறார் அவர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published: