முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஹஜ் யாத்திரை சென்ற சிம்பு பட நடிகை! கவனம் பெறும் புகைப்படம்!

ஹஜ் யாத்திரை சென்ற சிம்பு பட நடிகை! கவனம் பெறும் புகைப்படம்!

கடந்தாண்டு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார் சனா கான்.

கடந்தாண்டு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார் சனா கான்.

கடந்தாண்டு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்தார் சனா கான்.

  • 1-MIN READ
  • Last Updated :

    நடிகை சனா கான் தனது கணவருடன் ஹஜ் புனித பயணம் சென்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்தப் படம் கவனம் ஈர்த்து வருகிறது.

    தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சனா கான். அதற்குப் பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான சில படங்களிலும் நடித்துள்ளார் சனா கான்.

    கடந்தாண்டு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காக திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்த அவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இது தொடர்பான படங்களும், காணொலிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. சூரத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து சனா கானுக்கு சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர் ரசிகர்கள்.




     




    View this post on Instagram





     

    A post shared by Saiyad Sana Khan (@sanakhaan21)



    மேலும் படிக்க - சிம்புவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?

    இந்நிலையில் தற்போது தனது கணவர் முஃப்தி அனஸுடன் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ளார் சனா கான். அங்கு எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட, தற்போது அந்தப் படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published: