கீழடியில் கிடைத்த வெள்ளிக் காசு: புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

கீழடி அகழாய்வு பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் வெள்ளியிலான முத்திரைக் காசு கிடைக்கப்பெற்றுள்ளது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதன்மூலம், தொடர்ந்து பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன.

  இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெறுவதால் தமிழர்களின் தொன்மை , வரலாறு ஆகியவை பற்றிய பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  Also read: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

  இந்த உண்மைகள் வெளி வருவதால் ஒரு சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்கள் வயிறு வேண்டுமானால் எரிந்துவிட்டு போகட்டும். நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வு மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.

  இதனிடையே, கீழடியில் வெள்ளியிலான முத்திரைக் காசு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வெள்ளி காசில், முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் குறியீடுகளும், பின்புறம் அரைவட்டம் மற்றும் ‘ட’ வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.

  இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, கீழடியின் கொடை குறைவதில்லை. கங்கைச் சமவெளியுடனான பழந்தமிழர் வணிகத் தொடர்பிற்கான மற்றுமொரு சான்று.


  வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. காலம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: