Home /News /tamil-nadu /

பொது கழிப்பறையை பயன்படுத்த கையெழுத்தும் கைப்பேசி எண்ணும் அவசியம்!

பொது கழிப்பறையை பயன்படுத்த கையெழுத்தும் கைப்பேசி எண்ணும் அவசியம்!

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பொது கழிப்பறையை பயன்படுத்துவதற்கு கையெழுத்தும் கைப்பேசி எண்ணும் கட்டாயம் என்கிற மதுரை மாநகராட்சியின் அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாநகராட்சி அண்ணாமலை வளாகம் நிழல் தரும் பல மரங்களைக் கொண்டது. அதையொட்டி சுற்றுச்சூழல் பூங்கா அமைந்திருப்பது அந்த பகுதியில் ரம்மியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தினமும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த இடத்தில் அரசுத்தேர்வுக்காக படித்து வருகின்றனர்.

    மாநகராட்சி பூங்காவிற்கு படிக்க வரும் இளைஞர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையையே பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை உபாதைகளுக்கு நேரம் கிடையாது என்பதை அறியாத மாநகராட்சி நிர்வாகம், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு முன்பு கையெழுத்திட்டு, தங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்கிற புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,

    பொது இடத்தை தூய்மையாக வைக்க, தூய்மை இந்தியா திட்டம் செயல்பட்டு வரும் சூழலில் மாநகராட்சி வளாகத்திலேயே கழிப்பறை பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களை அவதியடையச் செய்துள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கழிப்பறைகளை பயன்படுத்த எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு கருதி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    ALSO WATCH...



    Published by:Saroja
    First published:

    Tags: Madurai, Madurai corporation, Public, Sign and cell no, Toilet

    அடுத்த செய்தி