Home /News /tamil-nadu /

‘வாயை கட்டி போராட்டம்.. மூக்கையும் சேர்த்து மூட வேண்டியது தானே’ - காங்கிரஸை சீண்டிய சீமான்

‘வாயை கட்டி போராட்டம்.. மூக்கையும் சேர்த்து மூட வேண்டியது தானே’ - காங்கிரஸை சீண்டிய சீமான்

சீமான்

சீமான்

தமிழ் மக்களுக்காக எந்த ஒரு ஞாயமான செயலும் செய்யாத காங்கிரஸ் கட்சி, தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமே அவர்களுக்கு செய்தது என சீமான் விமர்சித்துள்ளார்.

    பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்துவது ஞாயம் இல்லை, மூக்கையும் சேர்த்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டியது தானே என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் 4வது வார்டு பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாக உள்ளனர். ஆட்டோ ஓட்டுதல், மூட்டை தூக்குவது, சிறு வியாபாரம் செய்தல், தனியார் கம்பெனிகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணி செய்வது என தினக்கூலிகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பகுதி அரசு புறம்போக்கு நிலம் என தெரிவித்து வருவாய்த் துறை நோட்டீஸ் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் சந்தித்து அப்பகுதி மக்கள் குடியிருப்புகளை காலி செய்யாத வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்பகுதி மக்களை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சட்டப் போராட்டம் மூலமாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி இப்பகுதி மக்கள் குடியிருப்புகளை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்த குடியிருப்புகளை காலி செய்யாத வண்ணம் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். அடித்தட்டு மக்கள் இப்பகுதியில் வசித்து வருவது அரசுக்கு தெரிந்ததே. 60 ஆண்டுகளுக்கு மேலாக 450 குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளது. அரசு காலி செய்ய சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சாலை மின் விளக்கு எரிவாயு இணைப்பு அடையாள அட்டைகள் என அனைத்தும் வழங்கியுள்ளது.

    இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் 7 ஏக்கர் நிலம் வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு இப்பகுதி மிக சிரமமாக இருப்பதாகவும் குடிசைகள் பகுதியாக இருப்பதால் அந்த பகுதியை நீதிமன்றம் மூலம் அரசு புறம்போக்கு இடத்தை காலி செய்து தரும்படி வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

    Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்துவது ஞாயம் இல்லை, மூக்கையும் சேர்த்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டியது தானே. காங்கிரஸ் தமிழகத்தில் தமிழக மக்களுக்காக எந்த போராட்டமும் கையில் எடுக்கவில்லை.

    தமிழ் மக்களுக்காக எந்த ஒரு ஞாயமான செயலும் செய்யாத காங்கரஸ் கட்சி, தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது என தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்திய அரசு தமிழக அரசு அப்பகுதி மக்களுக்கு உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிட்டு அனுப்பப்பட்டு வருகிறது. அது தமிழர்களுக்கு போய் சேராத நிலை உள்ளது. சிங்களர்களுக்கு மட்டுமே அது பிரித்துக் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    பேரறிவாளன் அவரது தாய் மட்டுமே சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டு விடுதலையாகி உள்ளனர். இதில் யாரும் இந்த விடுதலையை சொந்தம் கொள்ள முடியாது என சீமான் தெரிவித்தார்.

    செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு. 
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Seeman

    அடுத்த செய்தி