Home /News /tamil-nadu /

பொன்னையன் கருத்தை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொன்னையன் கருத்தை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொன்னையன் கருத்தை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொன்னையன் கருத்தை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியும் என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.

    பொன்னையன் கருத்தை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக அண்மையில் நடந்த அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் அதிமுக-தான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் ஐடி விங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பேசியிருந்தார். அவரது பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, அதிமுக அம்மா பேரவை சார்பில் நடந்த திறன் மேம்பாடு கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய கருத்து, அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே பாஜகவின் வி.பி.துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தளவுக்கு புள்ளி விவரத்தோடு நானும், ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்து வருகிறோம். அதோடு பாஜகவைச் சேர்ந்தவர் எப்படி பேசுகிறார் என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும்.

    வாலி எப்படி மோட்சம் அடைந்தார் தெரியுமா? கம்பராமாயணம் குறித்து விளக்கும் பேச்சாளர் மணிகண்டன்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூறிய அன்றைய தினமே சென்னையில் ரவுடிகளின் அட்டகாசம். இது பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வந்துள்ளது. அதோடு, மதுரை உயர் நீதிமன்ற கிளை, போலீஸாரின் ஒத்துழைப்புடன்தான் குற்றவாளிகள் தலைமறைவாகின்றனர் என்ற கருத்தையும் சொல்லியுள்ளது. அந்தளவுக்குத்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது.

    தமிழகத்தைப் பொருத்தவரை, தினந்தோறும் கொலை நடக்காத நாட்களே கிடையாது. அதேபோல், வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் மட்டும், ஏராளமான கொலைகள், திருட்டு, செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் இந்த அரசு தட்டிக்கேட்க அருகதையில்லாத அரசாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது என்று அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: O Pannerselvam, OPS - EPS, Ponnaiyan

    அடுத்த செய்தி