ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா?

விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த முறை கொரோனா பாதிப்பின் போது, மாணவர்கள் முகக்கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர். தொற்று குறைந்த பின் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது குறித்து, சுகாதாரத்துறையிடம் பள்ளி கல்வித்துறை கருத்து கேட்டுள்ளது.

கடந்த முறை கொரோனா பாதிப்பின் போது, மாணவர்கள் முகக்கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர். தொற்று குறைந்த பின் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தலைமை செயலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்கள், முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது குறித்து, சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: School education department