முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தனுமா...? ஆன்லைன் வகுப்பு பயன் இருக்கா? பள்ளிகளை எப்போ திறக்கனும்..? பெற்றோர்களே உங்களுக்கு சில கேள்விகள்...

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம், ஆன்லைன் வகுப்பு, கொரோனா அச்சம் என குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு சில கேள்விகள்...

முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தனுமா...? ஆன்லைன் வகுப்பு பயன் இருக்கா? பள்ளிகளை எப்போ திறக்கனும்..? பெற்றோர்களே உங்களுக்கு சில கேள்விகள்...
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 24, 2020, 3:01 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 90 சதவிகித தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறின. ஸ்மார்ட்போன், டேப்லட், லேப்டாப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றும், கட்டாய இணைய வசதியும் இதற்கு தேவைப்படுகிறது.

ஆன்லைன் கல்வி ஒருமாதிரி நடந்துகொண்டிருக்க, அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும் பல பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் தயங்குவது நியாயமாக பார்க்கப்படுகிறது.

எனினும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற குரலும் அங்கங்கு எழுகின்றன. இதுஒரு புறம் இருக்க, தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலோன பெற்றோருக்கு அது தலைவலியாக இருக்கிறது.


எந்த வருமானமும் இல்லாமல் 4 மாதங்கள் இருக்கும் நாங்கள் எப்படி கட்டணத்தை செலுத்த முடியும் என்று கேட்கின்றனர். கல்விக்கட்டணம் வசூல், ஆன்லைன் கல்வி எந்த அளவுக்கு உதவுகிறது, கொரோனா ஒழியாத வரை பள்ளிகளை திறக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? இப்படி சில கேள்விகள் கீழே இருக்கின்றன. பதிலளியுங்கள்...இந்த சர்வேயின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading