பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்கு பாடுபட்ட பாரதியார், வ.உ.சி பெயரை இருட்டடிப்பு செய்யாதீர்: அண்ணாமலை

பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்கு பாடுபட்ட பாரதியார், வ.உ.சி பெயரை இருட்டடிப்பு செய்யாதீர்: அண்ணாமலை

பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்கு பாடுபட்ட பாரதியார், வ.உ.சி பெயரை இருட்டடிப்பு செய்யக்கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.

  யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். இதனால் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் எதிரியாக கொண்டு செயல்பட்டார் பெரியார். நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

  ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம் என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியாருக்கு முன்பே, சமூக நீதிக்காக பாரதியார், வ.உ.சி போன்றவர்களும் பாடுபட்டுள்ளனர். அவர்களை இருட்டடிப்பு செய்யாமல், வெளிக் காட்டுங்கள் என கூறுகிறோம்.

  Also read: தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

  தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாத ஆலயத்திற்கு, பாரத நினைவாலயம் என பெயர் வைத்து வரலாற்று பிழையை தமிழக அரசு செய்துள்ளது. அதை பாரத மாதா திருகோவில் என பெயர் மாற்ற செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்குள் மாற்றவில்லை என்றால், பாஜக சார்பில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: