எனக்கு ஏற்பட்டதுபோல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது - தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று விலகியவரின் பிரத்யேக பேட்டி
பாதுகாப்பு தான் முக்கியம், எனக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று விலகிய நபர் நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

மாதிரி படம்
- News18
- Last Updated: December 1, 2020, 7:58 PM IST
கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இருவேறு சோதனைகள் நடைபெற்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி பாதுகாப்பானதா என்றும் ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என்பதும் சோதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பொது சுகாதார துறை வழிகாட்டுதல் படி 75 பேருக்கு கோவிஷீல்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து ஆறு மாத கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படவில்லை என பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என சோதிக்கப்பட்டது. சோதனையின் போது ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்றொரு பிரிவினருக்கு பாதிப்பு இல்லாத மற்றொரு மருந்தும் வழங்கப்படும். யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, யாருக்கு வேறு மருந்து வழங்கப்பட்டது என சோதனையில் பங்கேற்கும் யாருக்கும் தெரியாது. சோதனையின் முடிவில் அனைவரையும் சோதித்து பார்த்தால் மட்டுமே தடுப்பூசி என்ன விளைவுகளை யாருக்கு ஏற்படுத்தியுள்ளது என தெரியும்.
சென்னையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு சோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே சோதனையின்போது அவருக்கு கொடுக்கப்பட்டது தடுப்பு மருந்து தான் என்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அதனால் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தடுப்பு மருந்து கொடுத்து பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்ததாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை, அடிக்கடி கோவப்படுவது என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இழப்பீடாக தனக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read... வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி
இதுகுறித்து அவர் நியூஸ்18 தமிழ்நாடுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், எனக்கு பிரச்னை ஏற்படும் பத்து நாட்களுக்கு முன் எடுத்துக் கொண்ட தடுப்பு மருந்து தான் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்க முடியும். எனக்கு ஏற்பட்டிருக்கும் நரம்பியல் பிரச்னை தடுப்பூசியின் அரிதான பின் விளைவுகளில் ஒன்று என்று தடுப்பூசி நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தடுப்பூசியால் ஏற்பட வாய்ப்புண்டு.வேற ஏதேனும் பாதிப்பு இருக்கலாமா என பல பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதில் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
காய்ச்சல், தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வாந்தி, தலைவலி போன்ற லேசான பிரச்னைகள் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி கோமா நிலையில் நினைவிழந்து இருப்பேன் என தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு தான் முதலில் முக்கியம். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் ஏன் ஏற்பட்டது என சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கணறிய வேண்டும். எனக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என சோதிக்கப்பட்டது. சோதனையின் போது ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்றொரு பிரிவினருக்கு பாதிப்பு இல்லாத மற்றொரு மருந்தும் வழங்கப்படும். யாருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, யாருக்கு வேறு மருந்து வழங்கப்பட்டது என சோதனையில் பங்கேற்கும் யாருக்கும் தெரியாது. சோதனையின் முடிவில் அனைவரையும் சோதித்து பார்த்தால் மட்டுமே தடுப்பூசி என்ன விளைவுகளை யாருக்கு ஏற்படுத்தியுள்ளது என தெரியும்.
சென்னையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு சோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. எனவே சோதனையின்போது அவருக்கு கொடுக்கப்பட்டது தடுப்பு மருந்து தான் என்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அதனால் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.