மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ‘மக்கள் நீதி மய்யத்திற்கென்று அடிப்படை தகுதி என்று ஒன்று இருக்கிறது. அது நேர்மை. அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கருணாநிதி வசனம், இளங்கோவன் இவர்களுடைய வரிகளைப் புரிந்து கொண்ட தமிழகத்தில் என் வசனம் புரியாதா எனவும் நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என கூறினார்.
எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால் ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் லாங் லிவ் தமிழ்நாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை, இனி இந்தியா இப்படி தான் இருக்கும் என்பவர்களால் மட்டும் தான் நல்ல அரசியல் செய்ய முடியும் என காந்தியை குறிப்பிட்டு கூறினார்.
தமிழ்நாட்டின் வரைபடத்தை கிழிக்க வேண்டும் என்ற திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் ஆசியாவில் முதல் (centrism) நடுநிலையான கட்சி மக்கள் நீதி மய்யம் என அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.