ஆடம்பரத்துக்குதான் அங்கீகாரம் கிடைக்கிறது: தொண்டர்கள் எதிர்பார்ப்பு உழைப்புக்கான அங்கீகாரம் - கனிமொழி

ஆடம்பரத்துக்குதான் அங்கீகாரம் கிடைக்கிறது: தொண்டர்கள் எதிர்பார்ப்பு உழைப்புக்கான அங்கீகாரம் - கனிமொழி

கனிமொழி

தற்போது ஆடம்பரத்துக்கும், சத்தத்துக்கும்தான் அங்கீகாரம் கிடைக்கிறது. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதுதான் தி.மு.கவின தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று தி.மு.கவின் மகளிரணித் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை மேற்கு மாம்பலத்தில் தென்மேற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி பங்கேற்று 2,000 பேருக்கு சில்வர் பாத்திரங்கள், பொங்கலுக்கான அரிசி கரும்பு ஆகியவை கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘அமைதியாக பணி செய்பவர்களின் உழைப்பு பல நேரங்களில் பல பேர் உணர்ந்து கொள்வது கிடையாது. இப்போது ஆடம்பரத்துக்கும் சத்தத்துக்கும் தான் அங்கீகாரம் கிடைக்கிறது. இந்த காலம் அப்படி. ஆனால் திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கக்கூடியது உண்மையான உழைப்புக்கான மரியாதை மட்டும் தான்.

  தி.மு.கவில் கட்சி பொறுப்பு தான் அனைவருக்கும் முக்கியம். எம்.எல்.ஏ சீட்டு, கவுன்சிலர் பொறுப்பு இல்லை என்றாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் என்ன வயசானாலும் கட்சி பொறுப்பு இல்லை என்றால் அதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு தி.மு.க தொண்டர்கள் மகளிரணியில் இருந்தாலும் கட்சி தங்களை அங்கீகரிக்க வேண்டும். உழைப்பை உணர வேண்டும் என்பது தான் எதிர்ப்பார்ப்பு.

  தமிழ்ப் புத்தாண்டு என்பது நம் அடையாளம். அதை மீட்டெடுத்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. அவர்கள் யாருடைய நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என தெரியும். மீண்டும் திமுக ஆட்சி அமையும் போது தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும்.

  விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாடுவது தான் பொங்கல் திருநாள். ஆனால் இந்நாட்டில் விவசாயிகள் பாடுபடுகிறார்கள். மத்திய அரசு விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கின்றனர். தமிழகம் எதில் வெற்றி நடை போடுகிறது? எல்லாத்திலும் சரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: