மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜு
  • Share this:
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘எங்கள், கட்சிக்குள் பேதமே இல்லை. ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. தொழில்கள் நிறைய வேண்டும் என்பதற்காகவே இந்த இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு தலைநகர் உள்ளது.

பா.ஜ.க கை காட்டும் கட்சி அடுத்து ஆட்சியமைக்கும் என்பது அவர்கள் கட்சியின் கருத்து. எங்கள் பாதை தெளிவான பாதை. தோழமை கட்சியோடு இணைந்து செயல்படுகிறோம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு இல்லை. எம்ஜிஆர்க்கு பிறகு திரையுலக சர்க்கரவர்த்தியாக கமலஹாசன் இருந்தாலும், அரசியலில் தேர்ந்தவரில்லை. திரையுலகில் கமலஹாசன் ஜாம்பவான், அரசியலில் எல்கேஜி. அதிமுகவில் இனோவா கொடுக்க வேண்டும் என்றால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டும். திருச்சியை தலைநகராக்க எம்.ஜிஆர் விரும்பினார். ஆனால் அது அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நடைபெறவில்லை.

மதுரையின் கட்டமைப்பை பெருக்க 2-வது தலைநகராக்க வேண்டும். தகவல் தொழில் நுட்ப நகர், எய்ம்ஸ் என பலமான கட்டமைப்பை மதுரை பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பெற்று வருகிறது. முதல்வர் பல சாதனைகளை செய்துள்ளார். அதுபோல மதுரையை தலைநகராக்கி சாதனை புரிய வேண்டும். எம்.ஜி.ஆரின் கனவு மதுரையை தலைநகராக்குவது.


மதுரையை மையமாக வைத்து இரண்டாவது தலைநகர் - அமைச்சர் உதயகுமார் தீர்மானம்


புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே அந்த முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. முக்கிய முடிவுகள் மதுரையில் தான் முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா கூட மதுரையில் தான் முக்கிய முடிவுகளை எடுத்தார். நிச்சயமாக மதுரை 2 ஆவது தலைநகரமாக வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம். அரசியல் முடிவு எடுக்கும் இடம்’ என்று தெரிவித்தார்.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading