தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுகதான் காரணம் - தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டு

எல். முருகன்

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது மேலும் எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

 • Share this:
  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

  தமிழகத்தில்  சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழனி முருகன் கோவிலில் பாஜக தலைவர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர்,மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது மேலும் எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியும், தடுப்பூசி முகாம்களில் தி.மு.க வினர் அதிகாரிகளை மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும் பற்றாக்குறைக்கு தி.மு.க-தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து பேசியபோது, நாங்கள் தேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்தால் தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும் என்றும், கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்றார். அதேபோல் எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம் தான் என்றும் கூறினார்.

  Also Read: தந்தையின் கடனுக்காக மகனின் சேமிப்பு கணக்கு முடக்கம் - மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் விவசாயி உயிரிழந்த பரிதாபம்

  மேலும் நேற்று புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்ற பயன்படுத்துவது குறித்து பின்னர் பேசுகிறேன் எனக் கூறியும், கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் எனவும் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: