சோழிங்கநல்லூரில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் - கமல்ஹாசன் உறுதி

கமல்ஹாசன்

சோழிங்கநல்லூரில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்த முறை மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்கவில்லை என்றால் திருடர்கள்தான் திரும்ப திரும்ப உங்களுக்கு கிடைப்பார்கள். அதை மாற்றி அமைக்க வேண்டும் என மேடவாாக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ராஜுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேடவாக்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய அவர் “சோழிங்கநல்லூரில் உள்ள சுங்கச்சாடிகள் அகற்றப்படும், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், பெரும்பாக்கம் போன்ற பகுதியை மறு சீரமைத்து, சிசிடிவி வைத்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து பாதுகாக்கப்படும், ரவுடிகளை ஒடுக்கப்படுவார்கள் என்றார்.

கமல்ஹாசன்


மேலும் பாண்டு பேப்பரில் எழுதி கொடுக்கும் கட்சி எங்களை தவிர வேறு ஒரு கட்சி இதுவரை இல்லை இனி வரபோவதும் இல்லை என்றார்.

ஊழல் இல்லாத ஆட்சி தர வேண்டும் என்றால் தலைமை சரியாக இருந்தால் அடிமட்டம் சரியாக இருக்கும் அதற்கான உத்திரவாதத்தை நான் தருகிறேன்.

இந்த முறை மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க வில்லை என்றால் திருடர்கள்தான் திரும்ப திரும்ப உங்களுக்கு கிடைப்பார்கள். அதை மாற்றி அமைக்க வேண்டும்.

பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதை உங்களுக்கு மீட்டு தருவோம்.

நான் மக்கள் பணத்திற்கு ஆசைப்படமாட்டேன். வேண்டுமென்றால் வருமான வரித்துறையை கேட்டு பாருங்கள். நான் செலுத்தும் வரிப்பணம் உங்களுக்கானது. அது வரும் வழியில் திருடப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறாரா என்று நான் கண்காணித்து வருவேன் என்று தெரிவித்தார்.
Published by:Arun
First published: