முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேனியில் அதிர்ச்சி சம்பவம் - கறிக்கடையில் புகுந்து கத்தியால் தனது கையை துண்டாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்

தேனியில் அதிர்ச்சி சம்பவம் - கறிக்கடையில் புகுந்து கத்தியால் தனது கையை துண்டாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்

தேனியில் அதிர்ச்சி சம்பவம் - கறிக்கடையில் புகுந்து கத்தியால் தனது கையை துண்டாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்

தேனி அருகே குடும்ப பிரச்னை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் தனது இடது கையை கசாப்பு கடை கத்தியால் தானே வெட்டிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் ராணுவ வீரர் கோழிக்கடைக்குள் புகுந்து கறி வெட்டும் கத்தியால் ஒரு கையை துண்டாக வெட்டிவிட்டு, மற்றொரு கையை அங்கிருந்தவர்களை வெட்டச் சொன்னார்.

இவ்வளவு கொடூரமாக தன் கையை தானே வெட்டிக்கொள்ள காரணம் என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரி புரத்தை சேர்ந்த மனோகரன் மகன் வெங்கடேசன். இவரது மனைவி யுவஸ்ரீ. ராணுவத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஓய்வு பெற்று காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேசன் கடந்த சில தினங்களாக மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை காமயகவுண்டன்பட்டியிலிருந்து கம்பத்திற்கு இருசக்கர வாகனத்தில் வெங்கடேசன் சென்றுள்ளார். கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த கோழிக்கடை முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்துள்ளார்.

திடீரென அங்கிருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து தனது கையை தானே வெட்டத் தொடங்கி உள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.

மேலும் படிக்க... தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து இறைச்சி வெட்டும் கத்தியால் நான்கு முறை வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. மேலும் அங்கிருந்தவர்களை பார்த்து மற்றொரு கையை யாராவது வெட்டுங்கள் என்று கூறிக்கொண்டே கத்தியை நீட்ட அனைவரும் உறைந்து போயினர். பின்னர் கடையை விட்டு வெளியேறிச் சென்றார்.

தகவல் அறிந்து சென்ற கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த கையை வெட்டிக்கொள்ளும் காட்சியை கைப்பற்றினர். வெங்கடேசன் ஏன் இப்படி செய்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

' isDesktop="true" id="339251" youtubeid="g8_BYwTzZjQ" category="tamil-nadu">

முன்னாள் ராணுவ வீரர் தனது கையை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: CCTV, Online crime, Theni