Home /News /tamil-nadu /

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடலை தேடும் போது முதலை குறுக்கிட்டதால் அதிர்ச்சி

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடலை தேடும் போது முதலை குறுக்கிட்டதால் அதிர்ச்சி

 கொள்ளிடம் ஆற்றில்  முதலை

கொள்ளிடம் ஆற்றில் முதலை

சந்தப் படுகை கிராமத்திலிருந்து கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமான பழையாறு துறைமுகம் வரை தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டும் உடல் கிடைக்கவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடலை 23 வது நாளாக தேடும் பணி இன்று நடைபெற்றது. அப்பொழுது முதலை குறுக்கிட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மாரியப்பன்(52). இவர் கடந்த 28ம் தேதி காலையில் ஆற்றின் நடு திட்டுப் பகுதியில் உள்ள பகுதிக்கு ஆற்றில் இறங்கி சென்றபொழுது தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பைபர் படகின் மூலம் மீனவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சந்தப் படுகை கிராமத்திலிருந்து கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமான பழையாறு துறைமுகம் வரை தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டும் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மேலும் இரண்டு விசைப்படகுகள் மீனவர்கள் மற்றும் இளைஞர்கள்  தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடலை தேடும் தீயணைப்புத் துறையினர்


    உடல் கண்டெடுக்க படவில்லை.தொடர்ந்து  4 நாள் தேடுதலுக்கு பிறகு ‌‌ கொள்‌ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வரத்து அதிகமானதால் மாரியப்பன் உடலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில் சந்தப்படுகை கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று இன்று கொள்ளிடம் போலீசார்  மீண்டும் மாரியப்பன் உடலை தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து வெள்ள மணல் கிராமத்திலிருந்து படகு வரவழைக்கப்பட்டு அதில் கொள்ளிடம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார், விஏஓ சங்கீதா மற்றும் மீனவர்கள்,கிராம இளைஞர்கள் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள மணல் கிராமம் வரை படகில் சென்று மாரியப்பன் உடலை வலை போட்டு தேடினர். தொடர்ந்து மாலை வரை தேடியும் மாரியப்பன் உடல் கிடைக்கவில்லை.

    குறுக்கிட்ட முதலை


    தண்ணீரில் படகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கரைப்பகுதியில் இருந்து ஓடி வந்த ஒரு முதலை படகுக்கு அருகாமையில் வந்து குதித்ததை கண்டு படகில் சென்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  ஆற்றில் முதலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மாரியப்பன் உடலை முதலை பிடித்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

    செய்தியாளர் : பிரசன்ன வெங்கடேசன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Mayiladuthurai

    அடுத்த செய்தி