Home /News /tamil-nadu /

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஜாமின் கோரிய சிவசங்கர் பாபா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஜாமின் கோரிய சிவசங்கர் பாபா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டில்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    Also Read : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு

    இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்த போது, சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான கேளம்பாக்கம் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளை தூண்டி விட்டு இந்த பொய் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை நிரந்தரமாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும், அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

    காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், நேற்று கூட ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிவசங்கர் பாபா மாணவிகளுடன் இருந்த புகைப்படங்களையும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல் செய்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்த்தில் தான் உள்ளது என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்றார்.

    Also read : நெல்லை : இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் உதவி செய்யவில்லை - மாணவர்கள் குற்றச்சாட்டு

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், இந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்றும், மனுதாரருக்கு 73 வயதாகி விட்டது என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் என கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Siva Shankar Baba

    அடுத்த செய்தி