Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஷவர்மா விற்க தடை இல்லை, முறையாக சமைத்து விற்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் ஷவர்மா விற்க தடை இல்லை, முறையாக சமைத்து விற்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஷவர்மா

ஷவர்மா

Shawarma Issue | ஷவர்மா கடைகளுக்கு சுகாதாரத்துறை தடை விதிக்கவில்லை என்றும் முறையாக சமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நலத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்களுக்கான மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்த கலந்தாய்வு கூட்டத்தின்போது சென்னை மண்டல நியமன அலுவலர் மருத்துவ சதீஷ் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை  நியமன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் தற்போது ஷவர்மா, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கெட்டுப் போவது குறித்தும் கலப்படம் நிறைந்ததாக இருப்பது குறித்தும் கண்டறியப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஷவர்மா கடைகளுக்கு சுகாதாரத்துறை தடை விதிக்கவில்லை என்றும் முறையாக சமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    Read More தாயின் உடலை ட்ரமில் போட்டு சிமெண்ட் பூசி மூடிய மகன்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்


    சென்னையில் 530 ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஷவர்மா சாப்பிட தகுதியானதாக உள்ளதா என கண்டறிய  Microbial test செய்யப்பட வேண்டும். அதற்காக இது வரை 160 கடைகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு சில மாவட்டங்களிலும் இது போன்று மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
    சாலையோரமாக உள்ள சிறு கடைகளில் அசைவ உணவை பதப்படுத்தி வைக்க ப்ரீசர் கிடையாது. எனவே ஒரு நாளுக்கு தேவையான இறைச்சியை மட்டும் வாங்கி விற்க வேண்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே கேரள மாநிலத்தில் ஷவர்மா அசைவ உணவுகள் சாப்பிட்டாதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்த அனைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்த பட்டுள்ளது.

    மேலும் பான், குட்கா ஆகியவற்றுக்கான தடையை நீக்க பலர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பொருட்கள் மீதான தடை தொடரும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை விற்பனை செய்யப்படாமல் உள்ளனவா என தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது அதிகரிக்கும்.  எனவே அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Food, Tamilnadu

    அடுத்த செய்தி