முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Shang-Chi இரண்டாம் பாகத்தில் ஜாக்கி சான்...?

Shang-Chi இரண்டாம் பாகத்தில் ஜாக்கி சான்...?

. ஜாக்கி சானுக்கு ஹாலிவுட் புதிதல்ல. ரஷ் ஹவர் சீரிஸின் மூலம் நேரடி ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துவிட்டார். ஆனால், பல வருடங்களாக அவர் ஹாலிவுட் படம் எதிலும் நடிக்கவில்லை.

 • 1-MIN READ
 • Last Updated :

  இந்த வருடம் வெளியான ஹாலிவுட் படங்களில் மார்வெலின் ஷாங் -  சி ஓர் இன்ப அதிர்ச்சி. ஆசியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் சூப்பர் ஹீரோவாக நடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு என்றால், படம் உலக அளவில் வெற்றி பெற்றது இன்னொரு சிறப்பம்சம். இதன் சீக்வெல் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய டெஸ்டின் டேனியல் கிரீட்டனே இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார்.

  அவரிடம், இரண்டாவது பாகத்தில் யாரை புதிதாக நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்கப்பட்டது (நாயகன் வேடத்துக்கு அல்ல). இந்த கேள்விக்கு, ஜாக்கி சான் நடித்தால் அது என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறியது போலாகும் என்று பதிலளித்தார் கிரீட்டன். ஷாங் - சி படத்தின் வெற்றிக்கு படத்தில் இடம் பெற்ற மார்ஷியல் ஆர்ட் சண்டைக் காட்சிகள் முக்கிய காரணமாக அமைந்தன. இரண்டாம் பாகத்தில் நாயகனுடன் ஜாக்கி சானும் சண்டையிட்டால் எப்படியிருக்கும்?

  தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

  கற்பனையே கதிகலங்குகிறது அல்லவா? இது இயக்குனரின் விருப்பமாக மட்டுமே இருக்குமா இல்லை நடைமுறை சாத்தியமா என்று இப்போதே அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர். ஜாக்கி சானுக்கு ஹாலிவுட் புதிதல்ல. ரஷ் ஹவர் சீரிஸின் மூலம் நேரடி ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துவிட்டார். ஆனால், பல வருடங்களாக அவர் ஹாலிவுட் படம் எதிலும் நடிக்கவில்லை.

  Also read... முதல்நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தி 'புஷ்பா' சாதனை

  இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவை விட்டு ஒருபோதும் விலகப் போவதில்லை. நல்ல ஸ்கிரிப்டுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அந்த நல்ல ஸ்கிரிப்ட் ஷாங் - சி இரண்டாம் பாகமாக அவருக்குத் தோன்றினால், கிரீட்டனின் வாழ்நாள் கனவு நனவாக சாத்தியமிருக்கிறது.

  First published: